×

கோயம்பேடு மார்க்கெட்டில் முக கவசம் அணிவது கட்டாயம்

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு காய்கறி, பழம், பூ மற்றும் உணவு தானிய மார்க்கெட்டில் கொரோனா பருவலை தடுக்க அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி தலைமையில், ஒலிபெருக்கி மூலம் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று விழிப்புணர்வு செய்து வருகின்றனர். வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் முகக் கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்  வசூல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோயம்பேடு சிறு, மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் தலைமையில் இன்று அதிகாலை 7 மணி அளவில், கொரோனா பரவல் தடுக்க கண்டிப்பாக வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் முக கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது மார்க்கெட்டுக்கு முக கவசம் அணியாமல் வந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக முகக் கவசம் அணிவிக்கப்பட்டது. இலவசமாக முக கவசம் வழங்கினர்.‘கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்கு அங்காடி நிர்வாகம் சார்பில், பல்வேறு வழிமுறைகளை அதிகாரிகள் கடைபிடித்து வருகின்றனர். வியாபாரிகளும் கொரோனா வழிமுறைகளை பின்பற்றவேண்டும். முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.

அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை விற்பனை செய்ய மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துவிட்டு சிறு, மொத்த வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக முழு ஒத்துழைப்பு செய்து கொண்டு வருகின்றோம். கடைகள் முன் பிளாஸ்டிக் விற்பனை செய்ய மாட்டோம் என்ற அறிவிப்பு பலகையும் வைத்துள்ளோம். தொடர்ந்து அங்காடி நிர்வாகத்துக்கு எங்க சங்கத்தின் சார்பில் ஒத்துழைப்பும் அளிக்கப்படும்’ என்று முத்துக்குமார் கூறினார்.


Tags : Coimbed Market , Wearing a face mask is mandatory at the Coimbatore market
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் சரிவு