சென்னையில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்தில் அதிவேகமாக பைக்கில் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!!

சென்னை: சென்னையில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்தில் அதிவேகமாக பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை சாலிகிராமத்தில் கடந்த 23ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கினார். நள்ளிரவு 12 மணியளவில் சாலிகிராமம் நாவலூர் மெயின் ரோட்டில் இருந்த அந்த இளைஞர் வேகமாக சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார். அதிவேகமாக சென்றதால் அவரது தலைக்கவசம் கீழே விழுந்து தலை சுவற்றின் மீது மோதி படுகாயமடைந்தார்.

தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே இளைஞர் உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதேபோல் மதுரவாயலில் நடந்த மற்றொரு விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த அந்த இளைஞர் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

Related Stories: