×

பெண் நீதிபதிகள் நீண்டநேரம் நீதிமன்றங்களில் அமர பயப்படக்கூடிய நிலைமைதான் தற்போது இருக்கிறது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேச்சு

டெல்லி: பெண் நீதிபதிகள் நீண்டநேரம் நீதிமன்றங்களில் அமர பயப்படக்கூடிய நிலைமைதான் தற்போது இருக்கிறது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்திருக்கிறார். டெல்லியில் முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகளின் ஒருங்கிணைந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். ஐகோர்ட் தலைமை நீதிபதிகள் மாநாட்டின் 2வது நாளில் நடக்கும் நிகழ்வில் பல் மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் தமிழ்நாடு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்றுள்ளார். பல மாநிலங்களில் உச்சநீதிமன்ற கிளைகள் அமைப்பது தொடர்பாக இன்றைய மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, பெண் நீதிபதிகள் நீண்டநேரம் நீதிமன்றங்களில் அமர பயன்படக்கூடிய நிலைமைதான் தற்போது இருக்கிறது என்று கூறினார். நாட்டின் பல பகுதிகளில் நீதிமன்ற வளாகங்களில் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. நீதிமன்றங்களை அதிகளவில் அணுகக்கூடியது அரசாங்கங்கள் தான். போலீஸ், அரசு அதிகாரிகள் முறையாக நடந்தால் நீதிமன்றத்தை நாடக்கூடிய தேவை குறைவாகவே இருக்கும். நாடு முழுவதும் சுமார் 4 கோடி வழக்குகளின் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

10 லட்சம் பேருக்கு வெறும் 20 நீதிபதிகள் தான் இருப்பதால் வழக்குகளை சமாளிக்க போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டார். பொது நல வழக்குகளின் (பிஐஎல்) பின்னால் உள்ள நல்ல நோக்கங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் இது தனிப்பட்ட நலன் வழக்குகளாக மாற்றப்பட்டு, திட்டங்களைத் தடுத்து, பொது அதிகாரிகளைப் பயமுறுத்துகிறது. அரசியல் மற்றும் கார்ப்பரேட் போட்டியாளர்களுடன் மதிப்பெண்களை தீர்க்கும் கருவியாக இது மாறியுள்ளது என கூறினார்.

Tags : Supreme Court ,Chief Justice ,Ramana , Female judges, fear of sitting in courts, Chief Justice Ramana
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...