×

கொரோனா ஹாட்ஸ்பாடாக மாறும் சென்னை ஐஐடி!: மேலும் 14 பேருக்கு தொற்று உறுதி..200ஐ நெருங்கும் மொத்த பாதிப்பு..!!

சென்னை ஐஐடி வளாகத்தில் புதிதாக இன்று 14 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் ஐஐடியில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக நம் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால் திடீரென்று ஓரிரு வாரங்களாக கொரோனா அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக கடந்த ஓரிரு வாரங்களாக நம் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு எகிறிக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். குறிப்பாக சென்னை ஐஐடியில் மாணவர்களிடையே கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருவதாக தெரிகிறது. கூட்டம் கூட்டமாக மாணவர்கள் மத்தியில் கொரோனாவின் தாக்கம் தென்படுகிறது.

அந்த வகையில் இன்று புதிதாக சென்னை ஐஐடியில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் தற்போது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடியில் விரைவில் கொரோனா பாதிப்பு 200ஐ நெருங்கும் சூழலும் உருவாகியுள்ளது. இதற்கிடையில், ஐஐடி மெட்ராஸ் அதிகாரிகள், கோவிட்-19 தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், தங்களை உடனடியாக பரிசோதிக்குமாறு கேட்டுக் கொண்டனர், மேலும் அனைவரும் மாஸ்குகள் அணியவும், சமூக இடைவெளியை பராமரிக்கவும் மற்றும் அனைத்து கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.


Tags : Chennai IIT ,Corona , Corona, Chennai IIT, 14 persons
× RELATED சென்னை ஐஐடியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு