×

நாகை அருகே கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி!: ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: நாகை மாவட்டம் திருமருகல் அருகே கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி இறந்த இளைஞர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தேர் திருவிழாவில் உயிரிழந்த இளைஞர் தீபன்ராஜ் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் தேர் வீதி உலாவின் போது சக்கரத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி உத்திராபதிஸ்வரர் கோயில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. அப்போது தேருக்கு முட்டுக்கட்டை போடும் பணியில் ஈடுபட்டிருந்த தீபராஜன் என்பவர் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

அவரை உறவினர்கள் மீட்டு திருமருகளில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தேரின் ராட்சத சக்கரம் தீபராஜின் கயிற்றில் ஏறி இறங்கியதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக தீபராஜின் உடல் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கோவில் நிர்வாகத்தினர், உறவினர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாகப்பட்டினம் மாவட்டம், திருச்செங்காட்டாங்குடியில் இன்று அதிகாலை நடைபெற்ற சப்பரத் திருவிழாவில், சப்பரத்திற்கு முட்டுக்கட்டை போடும்போது அதிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் தீபன்ராஜ் மீது சப்பரம் ஏறியதால் பலத்த காயமடைந்துள்ளார்.  

அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூபாய் ஐந்து இலட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


Tags : Nagai ,Chief Minister ,MK Stalin , Naga, chariot wheel, youth killed, MK Stalin
× RELATED குடிசை வீடுகளில் தீ – பாஜகவினர் மீது வழக்கு பதிவு