×

தனபாலன் கல்லூரியில் விளையாட்டு விழா

திருப்போரூர்: சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் பேராசிரியர் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் 31ம் ஆண்டு விளையாட்டு மற்றும் கலாச்சார தின விழா கடந்த 2 நாட்களாக நடந்தது. கல்லூரி தலைவர் புகழேந்தி தனபாலன் தலைமை தாங்கினார். செயலாளர் அமிர்தவர்ஷினி புகழேந்தி, இயக்குனர் ஸ்ரீதேவி புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பிரேமலதா வரவேற்றார்.

கல்லூரியில், கடந்த ஒரு வாரமாக நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் பெற்ற கபடி வீரரும், தமிழ்நாடு மாநில கபடி அணி தலைமைப் பயிற்சியாளருமான கோல்டு ராஜேந்திரன், பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். 2ம் நாளாக நடந்த கலாச்சார விழாவில் நடனம், நாடகம், பாடல், கோலம் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தில், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சிகளில், கல்லூரி துணை முதல்வர் பிரின்ஸ் ஜெயசீலன், ஆலோசகர் ரோஸ்லின் உள்பட பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் உதவிப் பேராசிரியர் பால விவேகானந்தன் நன்றி கூறினார்.


Tags : Sports Festival ,Dhanabalan College , Sports Festival at Dhanabalan College
× RELATED பரமக்குடியில் விளையாட்டு விழா