ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, பொன்னேரியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, பள்ளிப்பட்டு, பொன்னேரி யில்  கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை பெற்றுக்கொண்டனர்.எல்லாபுரம் ஒன்றியம் திருக்கண்டலம்  கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. இதில் பெரியபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மதன் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் ரவி, சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி  ஊராட்சி மன்ற துணை தலைவர் லிங்காதுறை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் சுகாதார துறை இணை இயக்குனர் (காசநோய் பிரிவு) லட்சுமி முரளி திட்ட  விளக்க உரையாற்றினார். திமுக ஒன்றிய செயலாளர் சக்திவேல் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.இந்த முகாமில், பங்கேற்ற பொதுமக்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, இசிஜி பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பொது சுகாதாரம், குழந்தை நலம், மகளிர்கான சிறப்பு சிகிச்சை, தோல் சிகிச்சை, கண், காது, பல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு 1,200 பேருக்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. இதில் திமுக நிர்வாகிகள் ரஞ்சித், ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றனர். முகாம் முடிவில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்

பள்ளிப்பட்டு: ஆர்.கே. பேட்டை அருகே அம்மையார்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. இதில், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரசாமி தலைமை வகித்தார். இந்த முகாமில், ஒன்றியக்குழு துணை தலைவர் திலகவதி ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். இதனைத்தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், இல்லம் தேடி மருத்துவ முகாம் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு மருந்து வழங்கப்பட்டது.முகாமில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு தாய் சேய் நலம், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, பல், கண், தோல் பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, சித்த மருத்துவம் காசநோய், தொழுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை மற்றும் பரிசோதனை பெற்றனர்.

இதில் ஒன்றிய திமுக செயலாளர்கள் சண்முகம், பழனி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ரகு, ஒன்றிய கவுன்சிலர்கள் பிரமிளா வெங்கடேசன், நதியா திருஞானம், திமுக நிர்வாகிகள் சீராளன் சுப்பிரமணி, மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.பொன்னேரி: அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ஜவகர்லால் தலைமை வகித்தார். துரை.‌சந்திரசேகர் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஜெயக்குமார் எம்பி கலந்துகொண்டு முகாமை துவக்கிவைத்தார்.

முகாமில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உமா மகேஸ்வரி, மீஞ்சூர் ஒன்றியக்குழு தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமகிருஷ்ணன், ரவி, மாவட்ட கவுன்சிலர் உதயசூரியன், ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா அன்பழகன், திமுக மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி துணை தலைவர் எம்டிஜி கதிர்வேல், மீஞ்சூர் ஒன்றிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மோகனா மற்றும் சுகாதாரத்துறை அலுவலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் நோய் கண்டறிதல் மற்றும் மருந்துகள் வழங்குதல், மக்கள் பதிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை வழங்குதல், தாய்-சேய் நலம், தடுப்பூசி சேவைகள், காசநோய் பரிசோதனை, கண், பல், காது, மூக்கு மற்றும் தொண்டை பரிசோதனைகள் நடைபெற்றது. நல்வாழ்விற்காக யோகா மற்றும் தியானம், காணொலி மூலமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Related Stories: