×

பருத்திப்பட்டு பசுமை பூங்காவை அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு

ஆவடி: பருத்திப்பட்டு பகுதியில் உள்ள ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் வகையில் இந்த ஏரி புனரமைத்து பசுமை பூங்கா அமைக்கப்பட்டது. சுற்றுச்சுவர், கைப்பிடி வசதிகளுடன் கூடிய நடைபாதை, பறவைகள் தங்கி செல்வதற்கான இரு தீவுகள், சிறுவர் விளையாட்டு திடல், மின்விளக்குகள் மற்றும் படகு குழாம் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டு, கடந்த அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டது. இந்த பசுமை பூங்காவில் படகு சவாரி நடந்தது. ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் தினமும் வந்து செல்கின்றனர். காலை, மாலை வேளைகளில் பொதுமக்கள் நடைபயிற்சி மற்றும் யோகா, சிலம்பாட்ட பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ஆஸ்திரேலியா நாட்டின் பெலிக்கான் பறவை உள்ளிட்ட பல பறவைகள் வரத்து இருந்தது.இந்நிலையில், இந்த பசுமை பூங்காவை அமைச்சர் சா.மு.நாசர் நேற்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது, அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது, ‘நடைபாதை சிதிலமடைந்துள்ளது. மின்விளக்கு, உடற்பயிற்சிகூடம், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களை சரி செய்ய வேண்டும்’ என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, உடனடியாக 74 மின்விளக்கு அமைக்கவும், மீண்டும் படகு சவாரியை தொடங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மக்கள் நலன் கருதி ஆவின் பாலகம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, ஆவடி மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், ஆணையர் சரஸ்வதி, பொறியாளர் மனோகர், நகரமைப்பு அலுவலர் முரளி, சுகாதார துறை ஆய்வாளர் ஜாபர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Minister ,Nassar ,Cotton Green Park , Minister Nasser ,surprise visit , Cotton Green Park
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...