கூடுதல் கிராமசபை கூட்டம் முதல்வர் அறிவிப்புக்கு: காங்கிரஸ் வரவேற்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி  வெளியிட்ட அறிக்கை: இனிவரும் காலங்களில் கூடுதலாக மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தன்றும், நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தன்றும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். மே1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று தமிழகத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். மக்கள் பங்கேற்கிற ஜனநாயகமான உள்ளாட்சி மைப்புகளில் கடந்த 10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தது.

ஆனால், ஊர்ப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டு ஜனநாயகம் உறுதி செய்யப்பட்ட அமைப்புகளாக பஞ்சாயத்து ராஜ் விளங்குகிறது. அதன் முதுகெலும்பாக இருந்து முடிவெடுக்கிற அதிகாரம் பெற்ற கிராமசபை கூட்டங்கள் வெற்றிகரமாக நடைபெற காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்பான செங்கம் ஜி.குமார் தலைமையில் இயங்குகிற ராஜிவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் உறுப்பினர்கள் இதனை ஒருங்கிணைத்து உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: