×

எம்எல்ஏக்கள் வேறு, வேறு கருத்து எதிரொலி: மண் வேண்டுமா...வேண்டாமா..? அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை

பேரவையில் அதிமுக எம்எல்ஏ தளவாய்சுந்தரம், ‘‘மண்பாண்ட தொழிலுக்கு மண் தேவை’’ என்று பேசினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘‘மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு மண் தேவை. இது சம்பந்தமான சட்டத்தில் கையெழுத்திடாமல் அதிமுக அரசு சென்று விட்டது. இப்போது நாங்கள் அதனை கொண்டு வந்து விதிமுறைகளை வகுத்து வெளியிட்டு இருக்கிறோம். முன்பு சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்று இருந்தது.

இப்போது அப்படி அல்ல. கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும், மண் எடுக்கும் காலம் 3 மாதம், யூனிட்டுக்கு ரூ60 கட்ட வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனுமதி பெறுவதில் சிக்கல் இருப்பதாக தகவல் வருகிறது. இது தொடர்பாக கலெக்டர்களிடம் பேசி வருகிறோம். இரண்டு அல்லது 3 நாளில் இது குறித்து தெரிவிக்கப்படும்’’ என்றார்.அப்போது எம்எல்ஏக்கள் சிலர் மண் அள்ளுவது தொடர்பாக வேறு, வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், ‘‘இப்போது நீங்கள் மண் வேண்டும் என்கிறீர்களா, வேண்டாம் என்கிறீர்களா, நீங்களே முடிவு செய்து விட்டு வாருங்கள். பிறகு பேசலாம்’’ என்றார். இதனால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.



Tags : minister ,thuraymurugan , different opinion
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...