காங்கிரஸ் எம்எல்ஏ வலியுறுத்தல் அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையம்

சட்டப் பேரவையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அறந்தாங்கி தொகுதி உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் (காங்கிரஸ்) பேசியதாவது:தமிழகமெங்கும் குழந்தை இல்லாத ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பலன்பெறும் வகையில் மாவட்ட மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

அறந்தாங்கி நகரில் உள்ள தஞ்சாவூர் சத்திரத்திற்கு சொந்தமான சந்தை நடைபெறும் இடத்தில் பாதி இடத்தில் சந்தை தொடர்ந்து செயல்படவும், மறுபாதி இடத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் ஒன்றை கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அறந்தாங்கி தொகுதியில் கடற்கரை பகுதியில் மீன் பதப்படுத்தும் குளிர்சாதன கிடங்கு மற்றும் சிறு துறைமுகம் ஒன்றையும் அமைத்து தர வேண்டும்.

Related Stories: