காலை பெண்களுக்கு, மாலை ஆண்களுக்கு கல்லூரிகளில் ஷிப்ட்களை மாற்ற அரசு பரிசீலனை: உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ பி.அய்யப்பன்(அதிமுக) பேசுகையில், ‘‘உசிலம்பட்டி தொகுதியில் அரசு கல்லுரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.இதற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், ‘‘அரசு கல்லூரிகள் இல்லாத தொகுதிகளில் கல்லூரிகளை அமைக்க அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்ததற்கு காரணம் கலைஞர் கருணாநிதி கொண்டுவந்த ஷிப்ட் முறை தான். அதே நேரம் பெண் கல்வியை அதிகரிக்க காலை ஷிப்ட் பெண்களுக்கும் மாலை ஷிப்ட் ஆண்களுக்கும் என்று மாற்றலாமா என்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருகிறது’’ என்றார்.

Related Stories: