×

துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது விபரீதம் ஆவடி சிஆர்பிஎப் பயிற்சி தளத்திலிருந்து வீட்டுக்குள் குண்டு பாய்ந்ததால் பரபரப்பு: திருவண்ணாமலை சென்றதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

சென்னை: ஆவடி சிஆர்பிஎப் பயிற்சி தளத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது வீட்டுக்குள் குண்டு பாய்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.ஆவடியில் சிஆர்பிஎப் பாதுகாப்பு படை பயிற்சிதளம் உள்ளது. இங்கு உடற்பயிற்சி, அணிவகுப்பு, நவீன ஆயுதங்களை கையாளுதல், கையெறி குண்டு வீசுதல், துப்பாக்கியுடன் கூடிய குண்டெறியும் பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி, வரைப்படக்கலை, நக்சல் உள்ளிட்ட தீவிரவாத நடவடிக்கைகளை முறியடிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மேலும், வெடிபொருட்கள் குறித்தும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு வீரர் துப்பாக்கியால் சுட்ட குண்டு, (9 எம்எம்) எதிர்பாராதவிதமாக, அருகில் உள்ள முத்தாபுதுப்பேட்டை மிட்னமில்லி காலனி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (36), பெயின்டர். வீட்டின் மேற்கூரையை துளைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தது. இதை அவர் கவனிக்கவில்லை.   

இந்நிலையில் மேற்கூரையில் துளை ஏற்பட்டு அந்த வழியாக நேற்று காலையில் சூரிய ஒளி வீட்டுக்குள் விழுந்ததையும் பார்த்துள்ளார் ராஜேஷ். அப்போதுதான் வீட்டில் ஒரு துப்பாக்கி குண்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே முத்தாபுதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார், விரைந்து வந்து அந்த குண்டை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜேஷின் மனைவி ஜானகி (28). இவர்களுக்கு நித்தீஷ் என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. அசம்பாவித சம்பவத்தின்போது ராஜேஷ் குடும்பத்தினர் திருவண்ணாமலைக்கு சென்று விட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. மேலும், பயிற்சி மையத்திற்கும் குண்டு விழுந்த இடத்திற்கும் இடையில் சுமார் 500 மீட்டர் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மையத்தின் அருகே விமானப்படை பயிற்சி மையமும் உள்ளது. இதுதொடர்பாக உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Avadi ,Thiruvannamalai , குண்டுவெடிப்பு, அவந்தி
× RELATED பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி மூச்சு திணறி பரிதாப சாவு: ஆவடி அருகே சோகம்