×

ஆன்லைன் விளையாட்டு விவகாரம் ஜாமீன் கோரி பப்ஜி மதன் மனு: போலீஸ் பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை தவறான வழியில் கொண்டு சென்றதாக அளித்த புகார்களின்படி, பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்ததால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க  சென்னை மாநகர காவல் ஆணையர்  உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை சமீபத்தில்  சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.இந்நிலையில், ஜாமீன் கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பப்ஜி மதன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மதன் தரப்பில் கடந்த 10 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தன் மீதான குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால், ஜாமீன் வழங்க வேண்டுமெனவும்  வாதிடப்பட்டது. இதையடுத்து மதனின் ஜாமீன் மனு குறித்து சைபர் க்ரைம் பிரிவு காவல்துறை 10 நாட்களில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி  தள்ளிவைத்தார்.



Tags : Babji Madan , ஆன்லைன் விளையாட்டு விவகாரம் ஜாமீன் கோரி பப்ஜி மதன் மனு: போலீஸ் பதில்தர ஐகோர்ட் உத்தரவு
× RELATED பப்ஜி மதன், மனைவிக்கு குற்றப்பத்திரிகை நகல் தரப்பட்டது