மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு சாகும்வரை தூக்கு: போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை:  சென்னை கிண்டியை சேர்ந்த 15 வயது சிறுமி, தனது தந்தைக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை சக மாணவிகளிடம் கூறியுள்ளார். இந்த விவரம் தெரிந்த  செஸ் சைல்டு லயன் குழு உறுப்பினர் கிண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, தந்தை சூரியன், தாய் மாதவி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், சிறுமியை ஏழு வயதில் இருந்து 16 வயது வரை  சூரியன் பாலியல் வன்கொடுமை செய்ததும், இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்ததும் தெரிய வந்தது. இந்த தகவலை தனது தாய் மாதவியிடம் மகள் தெரிவித்தபோது, கருவை கலைத்த தாய்  சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

 இதையடுத்து, சிறுமியின் தந்தை மற்றும் தாய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. சிறுமி சாட்சியம் அளித்தார்.  குற்றச்சாட்டுகள் அனைத்தும் காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டதால் முதல் குற்றவாளியான தந்தை சூரியனுக்கு தூக்கு தண்டனை  விதிக்கப்படுகிறது.  அவரை சாகும்வரை தூக்கில் தொங்கவிட வேண்டும். தாய் மாதவிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.  

Related Stories: