சிறுவனின் உடலில் 10 இடங்களில் சூடு வைத்த கொடூர தாய்

ஆனைமலை: கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 25 வயது நிரம்பிய பெண் அதே பகுதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரும், மனைவியும் பிரிந்தனர். இந்த நிலையில் அந்த பெண் பொள்ளாச்சியை சேர்ந்தவரை 2வது திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இரண்டு கணவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளுடன் அந்த பெண் வசித்து வருகிறார்.

முதல் கணவருக்கு பிறந்த மகனுக்கு 10 வயது ஆகிறது. பழுக்க காய்ச்சிய கம்பியில்  அவனது உடலில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சூடு வைத்து தாய்  கொடுமைப்படுத்தினார். தகவல் அறிந்த குழந்தைகள் நல அதிகாரிகள் சிறுவனை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: