மாட்ரிட் ஓபன் டென்னிஸ் லெய்லா முன்னேற்றம்

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மியூச்சுவா மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, கனடா வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் தகுதி பெற்றார்.முதல் சுற்றில் ஜெர்மனியின் ஆண்ட்ரியா பெட்கோவிச்சுடன் (34 வயது, 64வது ரேங்க்) நேற்று மோதிய லெய்லா (19 வயது, 20வது ரேங்க்) 6-1, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் 1 மணி, 59 நிமிடம் போராடி வென்றார்.

மற்றொரு முதல் சுற்றில் செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா (32 வயது, 30வது ரேங்க்) 3-6, 5-7 என்ற நேர் செட்களில் சுவிஸ் வீராங்கனை ஜில் தெய்க்மனிடம் (24 வயது, 35வது ரேங்க்) தோற்று வெளியேறினார். முன்னணி வீராங்கனைகள் மரியா சாக்கரி (கிரீஸ்), ஜெசிகா பெகுலா, டேனியலி கோலின்ஸ் (அமெரிக்கா), எலினா ரைபாகினா (கஜகஸ்தான்), டாரியா கசட்கினா (ரஷ்யா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Related Stories: