×

டி காக் - ஹூடா பொறுப்பான ஆட்டம் ரபாடா வேகத்தில் சரிந்தது லக்னோ

புனே: பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ரபாடாவின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது.எம்சிஏ ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீசியது. டி காக், கேப்டன் கே.எல்.ராகுல் இருவரும் பஞ்சாப் இன்னிங்சை தொடங்கினர். ராகுல் 11 பந்தில் 6 ரன் மட்டுமே எடுத்து ரபாடா வேகத்தில் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் வசம் பிடிபட்டார். அடுத்து டி காக் - தீபக் ஹூடா ஜோடி பொறுப்புடன் விளையாட, லக்னோ ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.இருவரும் 2வது விக்கெட்டுக்கு 85 ரன் சேர்த்தனர். டி காக் 46 ரன் (37 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஹூடா 34 ரன் (28 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, லக்னோ திடீர் சரிவை சந்தித்தது. க்ருணால் பாண்டியா 7, ஆயுஷ் பதோனி 4, மார்கஸ் ஸ்டாய்னிஸ் 1 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.

ஹோல்டர் 11 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய துஷ்மந்த சமீரா 17 ரன் விளாசி ரபாடா வேகத்தில் சாஹர் வசம் பிடிபட்டார். லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. மோஷின் கான் 13, ஆவேஷ் கான் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் ரபாடா 4 ஓவரில் 38 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ராகுல் சாஹர் 2, சந்தீப் ஷர்மா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் களமிறங்கியது.



Tags : De Gock - Hooda ,Rabada ,Lucknow , De Gock - Hooda responsible game Lucknow fell at Rabada speed
× RELATED டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி