அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் நடிகை மனு

புதுடெல்லி: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி விட்டதாக நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதில், உயர் நீதிமன்றம் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், நடிகை சாந்தினி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க  உத்தரவிட்டு, மணிகண்டனுக்கு வழங்கியுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்,’ என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: