எரிபொருள் மீது 250% வரி உயர்வு: பிரியங்கா தாக்கு

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசுகள் வசூலிக்கும் வாட் வரியை குறைக்க வேண்டுமென பிரதமர் மோடி சமீபத்தில் வலியுறுத்தினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘கடந்த 2014-15ம் நிதியாண்டில் இருந்து 2020-21ம் நிதியாண்டு வரை பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு 250 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014ம் ஆண்டில், கலால் வரி பெட்ரோலுக்கு ரூ 9.48ம், டீசலுக்கு ரூ 3.56ம் மட்டுமே இருந்தது’ என கூறி உள்ளார். இந்த டிவிட்டுடன், 6 ஆண்டுகளில் எரிபொருளுக்கான கலால் வரியை 250 சதவீதம் ஒன்றிய அரசு உயர்த்தியதாக கூறும் ஊடக அறிக்கை ஒன்றையும் அவர் டேக் செய்துள்ளார்.

Related Stories: