×

நீட் விலக்கு மசோதாவுக்காக அதிமுக ஏன் முற்றுகை போராட்டம் நடத்தவில்லை?: ஆயிரம்விளக்கு திமுக எம்எல்ஏ கேள்வி

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் ஆயிரம்விளக்கு டாக்டர் எழிலன் (திமுக) பேசியதாவது: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் அதிமுக கொண்டு வந்த 7.5 சதவீத ஒதுக்கீடு நீதிமன்றத்துக்கு போகும்போது அதை பாதுகாத்த பெருமை எங்கள் முதல்வரை சாரும் நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் சரியாக வாதாடாமல் இருந்துவிட்டு, நீங்கள் கொண்டு வந்த 7.5 சதவீத ஒதுக்கீட்டை சட்டரீதியாக பாதுகாத்து கொடுத்தவர் எங்கள் முதல்வர். நீட் விலக்கு மசோதாவுக்கு 2 முறை தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

ஆளுங்கட்சி என்பதால் போராட்டம் செய்ய ஒரு தயக்கம் இருக்கும். காரணம், ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு போராட்டம் செய்ய முடியாது. நீங்கள் கொண்டு வந்த 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் அனுமதி அளிக்காததால், நாங்கள் (திமுக) அப்போது எப்படி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தினோம். அதேபோன்று நீங்கள் ஏன் இப்போது எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு போராட்டம் நடத்தாமல் இருக்கிறீர்கள். கவர்னர் மாளிக்கைக்கு சென்று போராட்டம் நடத்தாமல் தேநீர் சாப்பிடுவது என்ன அர்த்தம், அதிமுக முற்றுகை போராட்டம் அறிவிக்கும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Millennial Kazhagam , Need Exemption Bill, AIADMK Siege, DMK MLA Question
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...