×

வள்ளியூரை தொடர்ந்து புறக்கணிக்கும் அரசு பஸ்கள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

வள்ளியூர்: நெல்லை மாவட்டம், வள்ளியூர் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று. வள்ளியூர் பஸ் நிலையத்திற்கு தினமும் வரும் நூற்றுக்கணக்கான பஸ்களை ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். வள்ளியூர் பஸ் நிலையத்திற்குள் அனைத்து அரசு பஸ்களும் வந்து செல்ல வேண்டும் என்கிற அரசாணை உள்ளது. இருப்பினும் பல்வேறு அரசு பஸ்கள் வள்ளியூர் ஊருக்குள் வராமல் குறைந்த பயணிகளுடன் புறவழிச்சாலை வழியாக சென்று விடுகின்றன.

இதற்கிடையே மதுரை மண்டலத்தை சேர்ந்த 18 பஸ்கள் வள்ளியூர் வழியாக கடந்த இரண்டு மாதங்களாக வந்து சென்றது. இதற்கு வணிகர் சங்கங்களின் வலியுறுத்தல்தான் காரணமாக இருந்தது. ஆனால் தற்போது கடந்த 10 நாட்களாக வள்ளியூர் ஊருக்குள் வராமல் புறவழி சாலை வழியாக பெரும்பாலான பஸ்கள் செல்கின்றன. சபாநாயகர் தொகுதியை புறக்கணித்து செல்லும் பஸ்களால் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

வேடசந்தூர், திண்டுக்கல், பழனி, போடி, திருச்சி, ராஜபாளையம், குமுளி, திருப்பூர், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் 14 பஸ்கள் வள்ளியூருக்குள் வராமல் புறவழி சாலை வழியாகவே செல்கின்றன. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் விரும்புகின்றனர்.

Tags : Vallyur , Government buses continue to boycott Valliyoor: Will authorities take action?
× RELATED நெல்லையில் வேன் டயர் வெடித்து...