×

இப்படியெல்லாம் வளர்ந்து இருக்காங்க... இவரது கால் மட்டுமே 6 அடி உயரம்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இளம்பெண்

டெக்சாஸ்: டெக்சாஸைச் சேர்ந்த மேக்கி கர்ரின் என்ற இளம்பெண்ணின் காலின் உயரம் மட்டுமே 6 அடிக்கு மேல் உள்ளதால், அவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த 19 வயதான மேக்கி கர்ரின் என்பவர் இரண்டு காரணங்களுக்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அவற்றில் உலகின் உயரமான கால்களை உடைய பெண் மற்றும் உயரமான கால்களை கொண்ட டீனேஜ் ெபண் என்ற இரு காரணங்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவரது காலின் உயரம் 6 அடி 10 அங்குலம். அவரது பாதங்களிலிருந்து கணக்கிட்டால் வலது கால் 134.3 ெச.மீ, இடது கால் 135.36 செ.மீ உயரம் கொண்டதாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் டிக்டாக் மூலம் பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை வெளியிட்டு வரும் மேக்கி கர்ரின், தனது உயரமான கால்கள் குறித்து எதிர்மறையான விமர்சனங்களுக்கு கூலாக பதில் அளித்து வருகிறார். இவரை 20 லட்சம் பேர் சமூக ஊடகங்களில் பின் தொடர்கின்றனர்.

அவரது வீடியோ ஒன்றை 3.61 கோடி மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் இங்கிலாந்து கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். உலகின் மிக உயரமான மாடல் அழகி பட்டத்தை பெற முயற்சித்து வருகிறேன்’ என்றார்.


Tags : To grow like this ... Her leg is only 6 feet tall: Guinness Book of World Records
× RELATED பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்: தமிழ் மாணவி அமெரிக்காவில் கைது