சிவசேனா எம்பி மீது பலாத்கார புகார்?.. மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை: மும்பை தெற்கு மத்திய தொகுதியின் சிவசேனா எம்பி ராகுல் ஷெவாலே மீது, இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தெற்கு மத்திய தொகுதியின் சிவசேனா கட்சி எம்பி ராகுல் ஷெவாலே மீது, 26 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் ஒன்றை சகினாகா காவல் நிலையத்தில் அளித்துள்ளார். இப்புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விவகாரம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் எம்பி ராகுல் ஷெவாலே தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘மும்பை புறநகர் பகுதியில் உள்ள சகினாகா காவல் நிலையத்தில் என் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்ததாக கூறப்படுகிறது. எனது அரசியல் இமேஜைக் கெடுக்கும் நோக்கில் என் மீது பாலியல் பலாத்கார புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். இந்த சதி செயல்களில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: