நாகர்கோவில் ஆசீர்வாதம் நகரில் சாலை போடும் பணி

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர பகுதியில் 33.77 கிலோ மீட்டர் சேதமான சாலைகள் ரூ.26 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைகள் சீரமைப்பதற்கு முன்பு பழைய சாலைகள் பெயர்த்து எடுத்துவிட்டு, ஜல்லி நிரப்பி சாலைபோடும் பணி நடக்கிறது. 33.77 கிலோ மீட்டர் தூரம் சாலை சீரமைக்கும் பணியில் முதல் கட்டமாக ஜல்லிகள் நிரப்பப்பட்டு, தார், ஜல்லி கலவை போடும் பணி நடந்து வருகிறது.

குறிப்பாக அனந்தன்பாலம் முதல் வடக்குகோணம் வரை உள்ள சாலை, ஆசாரிபள்ளம் பெருமாள்நகர் உள்பட பல சாலைகள் முழுவதும் சீரமைக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் தற்போது பணிகள் வேகமாக நடந்து வருகிறது. சாலை பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி மேயர் மகேஷ், அனைத்து ஒப்பந்ததாரர்களிடம் உத்தரவிட்டு இருந்தார். பணிகள் வேகமாக நடந்து வந்தநிலையில் கடந்த சில தினங்களாக மாநகர பகுதியில் மழை பெய்ததால், சாலை அமைக்கும் பணி தொய்வு ஏற்பட்டது.

தற்போது மழை நின்ற நிலையில் சாலை அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. நாகர்கோவில் ஆசீர்வாதம் தெருவில் சாலைபோடும் பணி மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.

Related Stories: