சொத்தவிளை கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலை

சுசீந்திரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கடற்கரை பகுதிகளில் சொத்தவிளை கடற்கரையும் ஒன்று. இந்த கடற்கரை ஓரம் நேற்று மாலை ஐந்தரை அடி உயரத்தில் பழமையான அம்மன் சிலை கரை ஒதுங்கியது. இந்த தகவல் அறிந்ததும் ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் கனக செல்வி, மதுசூதனபுரம் விஏஓ பிராகோன் ஆகியோர் விரைந்து சென்று அம்மன் கற்சிலையை மீட்டனர்.

தற்போது சிலை பறக்கை விஏஓ அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பிறகு கன்னியாகுமரியில் உள்ள அருட்காட்சியகத்தில் சிலையை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Related Stories: