×

தற்கொலைகளை குறைக்கும் நோக்கில் எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். எலிக்கொல்லி பசை விற்பனையை தடை செய்ய சிறப்பு கவன திட்டம் செயல்படுத்த வழிவகை செய்யப்படும் எனவும் அவர் கூறினார். தமிழகத்தில் எலி கொல்லி பசையை விற்பனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்து வரும் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் எலி கொல்லி பசை விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எலி கொல்லி பசை விற்பனையை தடை செய்ய சிறப்பு கவன திட்டம் செயல்படுத்த வலிவாகை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Minister ,Ma. Subramanian , Steps will be taken to ban the sale of raticide glue with the aim of reducing suicides; Information from Minister Ma. Subramanian
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதை...