திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வழக்கு!: அதிமுக மாஜி அமைச்சர் மணிகண்டன் ஜாமினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு ..!!

டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி, மணிகண்டனால் பாதிக்கப்பட்ட நடிகை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் மணிகண்டன் மீது நடிகை புகார் அளித்திருந்தார். அதன்பேரில் 2021 ஜூன் 20ம் தேதி மணிகண்டன் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரி முன்னாள் மைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Stories: