காரைக்கால் துறைமுகம் திவால் ஆனதாக தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயம் அறிவிப்பு: துறைமுகத்தை கைப்பற்ற அதானி குழுமம் தீவிரம்?

காரைக்கால்: தனியார் நிறுவனத்திடம் காரைக்கால் துறைமுகம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் திவால் ஆகி விட்டதாக தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி அந்த துறைமுகத்தை கைப்பற்ற அதானி குழுமம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஓம்காரா ஏஆர்சி நிறுவனத்திடம் காரைக்கால் துறைமுகம் 2,059 கோடி ரூபாய் கடனாக பெற்றது. வட்டியுடன் சேர்த்து 2,400 கோடி ரூபாயை காரைக்கால் துறைமுகம் திருப்பி செலுத்தாமல் தாமதிக்க நிலையில் அந்நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் காரைக்கால் துறைமுகத்துக்கு எதிராக தீர்ப்புகள் வந்தன.

இதையடுத்து தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயத்துக்கு விசாரணை சென்றது. காரைக்கால் துறைமுகத்தை திவால் அடைந்துவிட்டதாக தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயம் அறிவித்தது. இதையடுத்து திவால் அடைந்த காரைக்கால் துறைமுகத்தை கைப்பற்ற அதானி குழுமம் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கிருஷ்ணாபுரம், கங்காவரம் துறைமுகங்களையும் கைப்பற்ற அதானி குழுமம் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: