×

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ரூ.423.64 கோடியில் ஒருங்கிணைந்த ஆய்வக சேவைகள் தொடங்கப்படும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: முதலமைச்சரின் சீரிய முயற்சியால் தமிழகத்தில் கூடுதலாக 1,450 மருத்துவ மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே தொடங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். ரூ.1,018.85 கோடியில் 19 அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். காஞ்சிபுரத்தில் உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படும்  என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழக சட்டபேரவையில் பேசிய அமைச்சர் கூறியதாவது; ரூ.1,018.85 கோடியில் 19 மருத்துவமனைகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் 12 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரூ.15 கோடியில் புதிய ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 4,308 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

இதில் 1,021 உதவி மருத்துவர்கள், 3,287 மருத்துவம் சார்ந்த இதர பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறினார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ரூ.423.64 கோடியில் ஒருங்கிணைந்த ஆய்வக சேவைகள் தொடங்கப்படும் என்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் பரிசோதனை காலை 7 மணிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். சட்டப்பேரவையில் மருத்துவம் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர், முழு உடல் பரிசோதனை மையம் அனைத்து மருத்துவமனைகளிலும் இருக்கும் சாதாரண விஷயம், அதற்கு போய் அம்மாவின் பெயரை அதிமுக வைத்தது.

பெயர் மாற்றும் அளவிற்கு, காழ்ப்புணர்ச்சி திமுக அரசுக்கு இல்லை. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றால் வயிறு எரிகிறது, அற்புதமான கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றியுள்ளனர். ஆட்சி அமைந்ததும், மருத்துவமனையை மாற்றிவிடுவார்கள் என்றனர். ஆனால், புற்றுநோய் ரோபோடிக் சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. மருந்துகள் பற்றாக்குறை என்பதே தமிழ்நாட்டில் இல்லை. முந்தைய அரசு போல் தேவையற்ற மருந்துகளை வாங்கி இருப்பு வைப்பதில்லை, தேவையானவை மட்டும் தான் வாங்குகிறோம். மேலும், தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 1,74,831 ஆக உயர்த்தப்பட்டுள்ளது  என்றும் குறிப்பிட்டார்.

Tags : Minister ,Ma.M. ,Subramanian , Integrated laboratory services will be launched at a cost of Rs 423.64 crore under the People Search Medical Project; Information from Minister Ma. Subramanian
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...