×

நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு: நிலைமையை சமாளிக்க 670 பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்தது இந்தியன் ரயில்வே

டெல்லி: நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பல மாநிலங்களில் மின்சாரம் உற்பத்தி தடைபட்டு மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிலக்கரி விநியோகம் செய்யும் வகையில், 670 பயணிகள் ரயில் சேவையை இந்தியன் ரயில்வே ரத்து செய்துள்ளதாக அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்தடை ஏற்பட்டு வருகிறது. தற்போது கோடை தொடங்கி உள்ளதால், மின் தேவையும்அதிகரித்துள்ளது. இதையடுத்து, நிலக்கரி சுரங்கங்களில் இருந்து மாநிலங்களுக்கு நிலக்கரியை சரக்கு ரயிலில் எடுத்துச்செல்லும் வகையில், பயணிகள் ரயில் சேவையை ரத்து செய்துள்ளது.

இதன்படி, அனல் மின் நிலையங்களுக்கு, விரைவாக நிலக்கரியை எடுத்துச் செல்லும் வகையில், சில எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. கடந்த நாட்களில் 670 நடைகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

ரயில்வே சார்பில் நாள்தோறும் 400-க்கும் அதிகமான பெட்டிகள் மூலம் நிலக்கரி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பை உறுதி செய்யும் அடுத்த இரு மாதங்களுக்கு இந்த சேவை தொடரும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

Tags : Indian Railways , Coal shortage, passenger train service, Indian Railways
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...