×

ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ - பஞ்சாப் இன்று மோதல்

மும்பை: ஐபிஎல் தொடரில் 42வது லீக் போட்டியில் இன்று புனே எம்சிஏ மைதானத்தில் லக்னோ-பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. அறிமுக அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 5 வெற்றி, 3 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி லீக்கில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. அந்த போட்டியில் கேப்டன் ராகுல் சதம் விளாசினார். லக்னோ அணியில் கேப்டன் ராகுல், குயின்டான் டி காக், தீபக் ஹூடா, ஸ்டாய்னிஸ் நல்ல பார்மில் உள்ளனர். பஞ்சாப் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

முந்தைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை தோற்கடித்ததால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குகின்றனர். ஆனால் இந்த தொடரில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ள கேப்டன் மயங்க் அகர்வால் மற்ற  ஆட்டங்களில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. வலுவான தொடக்கம் கிடைக்க அவர்  தவானுடன் இணைந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவேண்டும். இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

Tags : IPL ,Lucknow ,Punjab , IPL Cricket: Lucknow-Punjab clash today
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி