×

இது எனக்கு சிறந்த ஐபிஎல் சீசன்: குல்தீப் யாதவ்

ஆட்டநாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவ் கூறியதாவது: நான் ஒரு சிறந்த பந்து வீச்சாளராக மாறியிருக்கலாம், ஆனால் நான் முன்பை விட மனரீதியாக வலுவாக இருக்கிறேன். தோல்வியை கண்டு நான் இப்போது பயப்படவில்லை. ரஸ்சலின் விக்கெட்டை திட்டம் வகுத்து வீழ்த்தியது எனக்குப் பிடித்திருந்தது. இது எனக்கு சிறந்த ஐபிஎல் சீசன். நான் எனது பந்துவீச்சை ரசிக்கிறேன். சரியான லைன் மற்றும் லென்த் பந்துவீசுவதிலேயே எனது கவனம் இருந்தது.

ஷ்ரேயாஸ் நன்றாக பேட்டிங் செய்ததால் அது ஒரு முக்கியமான விக்கெட். சாஹலுடன் போட்டி இருந்ததில்லை. அவர் என் பெரிய சகோதரர் போன்றவர், எப்போதும் எனக்கு ஆதரவாக இருக்கிறார். நான் காயமடைந்தபோது அவர் என்னை ஊக்குவித்தார், மேலும் அவர் ஊதா நிற தொப்பியை வெல்வார் என்று நம்புகிறேன், என்றார்.

Tags : IPL ,Kuldeep Yadav , This is the best IPL season for me: Kuldeep Yadav
× RELATED கணுக்கால் அறுவை சிகிச்சை சக்சஸ்: ஷர்துல் தாகூர் `மகிழ்ச்சி’ பதிவு