×

நாகர்கோவில் தொடக்கப்பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

நாகர்கோவில் :  நாகர்கோவில் தொடக்கப்பள்ளியில் படித்துவரும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து மாவட்டக்கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.  
 நாகர்கோவில் பறக்கை கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் நித்ய லெட்சுமணவேல்(59). இவர் நாகர்கோவிலிலில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இந்த பள்ளியில் 5ம் வகுப்பு மாணவிகள் சிலரிடம் நித்யலெட்சுமணவேல் சில்மிஷத்தில் ஈடுபட்டு, மாணவிகளை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சைல்டு ைலன் 1098  மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ஆகியவற்றுக்கு புகார் மனுக்கள் சென்றன. இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷகிலா பானு விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் நித்ய லெட்சுமணவேல், 5ம் வகுப்பு மாணவிகள் 3 பேரிடம்  சில்மிஷம் செய்தது தெரிய வந்தது. இது பற்றி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷகிலா பானு நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியர் நித்ய லெட்சுமண வேல் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, நேற்று முன்தினம் கைது செய்தனர்.  மாணவிகளிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக விசாரணை நடத்திய நாகர்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி லதா, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் நித்திய லட்சுமணவேலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags : Nagercoil Primary School , Nagercoil: The Headmaster Wado Insulated The Students Studying in Nagercoil Primary School Das Bin Suspended.
× RELATED நாகர்கோவில் தொடக்கப்பள்ளியில்...