பெரம்பலூர் செங்குணத்தில் ஏரி வடிகால் வாய்க்கால் தூர் வாரும் பணி-பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் நேரில் ஆய்வு

பெரம்பலூர் : செங்குணம் ஏரி வடிகால் வாய்க்கால் 3.5 கிமீ நீளத்திற்கு சிறப்பு தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்.

பொதுப்பணித்துறையின் (நீர்வளஆதார அமைப்பு) சா ர்பாக பெரம்பலூர் மாவட் டத்தில் 2022-2023ம் ஆண் டுக்கு, பெரம்பலூர் தாலுக் கா விளாமுத்தூர் தொடங் கி நெடுவாசல் கிராமம் வ ரை,மருதயாற்றில் 1கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ 15 லட் சம் மதிப்பில் தூர்வாரும் பணி, வேப்பந்தட்டை தாலு க்கா வெங்கனூர் ஏரியின் வரத்து வாய்க்கால் 2.50 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ 4.50 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி, அன்ன மங்கலம் ஊராட்சி அரசலூர் ஏரி வடிகால் 2 கிலோ மீ ட்டர் தூரத்திற்கு ரூ 7லட்சம் மதிப்பில் தூர்வாரும்பணி, அன்னமங்கலம் ஏரி வரத்து வாய்க்கால் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.4 லட்சம் மதி ப்பில் தூர்வாரும் பணி, ஆ லத்தூர் தாலுக்கா, செட்டிகுளம் ஏரியின் வரத்துவாய்க் கால் 3 கிலோ மீட்டர் தூரத் திற்கு ரூ4 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணி, குன்னம் தாலுக்கா அத்தியூர் ஏரியி ன் வரத்து வாய்க்கால் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ 5 லட்சம் மதிப்பில் தூர் வாருதல் உள்ளிட்ட 90.380 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ 2 கோடியே, 48 லட்சத்து, 50 ஆயிரம் மதிப்பிலான, 40 பணிகள் மேற்கொள்ளும் திட்டப் பணிகள் நடந்துவ ருகிறது.

இதில் பெரம்பலூர் அருகே செங்குணத்தில் ஏரியின் வடிகால்வாய்க்கால் 3.5 கிமீ நீளத்திற்கு, ரூ.8 லட்சம் மதி ப்பில் தூர்வாரும் பணிகள் நடந்து வருவதை நேற்று பெரம்பலூர் மாவட்ட பொது ப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் வேல்முருக ன் நேரில் பார்வையிட்டு ஆ ய்வுசெய்தார். அப்போது சி றப்பு தூர் வாரும் பணிகளை கவனக்குறைவின்றி முழு யாக மேற்கொள்ள ஊழிய ர்களுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: