×

கொள்ளிடம் பகுதியில் சமீபத்திய மழையால் பருத்தி பயிர் வளர்ச்சி மந்தம்

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம், ஆலாலசுந்தரம், மாணிக்கவாசல், கூட்டுமாங்குடி,கோதண்டபுரம், பச்சபெருமாள்நல்லூர், மஹாராஜபுரம், உமையாள்பதி, சந்தப்படுகை, திட்டுப்படுகை, முதலைமேடு, பெரம்பூர், குற்றம், சென்னிய நல்லூர், வடரங்கம், கீழமாத்தூர், கடுக்காய்மரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

நெல் அறுவடைக்கு பிறகு விவசாயிகள் கொள்ளிடம் பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பருத்தி பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது பருத்திப் பயிர் 3 மாத கால வளர்ச்சி அடைந்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையினால் பருத்தி பயிரின் வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. மேலும் பருத்தி பயிரில் களைகள் மண்டி காணப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகள் மழையால் சேதமடைந்த சில பருத்தி செடிகளை அகற்றிவிட்டு பருத்தி பயிரை மீண்டும் செழித்து வளரச் செய்யும் முயற்சியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த மாதம் முதல் பருத்திப் பயிர் அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் பருத்தி பயிரில் களைகள் மண்டியும், ஒரு சில இடங்களில் பூச்சித் தாக்குதலும் இருந்து வருகிறது. பூச்சித்தாக்குதல் ஏற்பட்ட பருத்தி பயிரில் விவசாயிகள் பூச்சி மருந்து தெளிக்கும் பணியிலும், களைகளை இயந்திரம் மூலம் அகற்றும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பருத்தி விவசாயிகள் கூறுகையில், சென்ற வருடத்தைவிட இந்த வருடம் விவசாயிகள் கொள்ளிடம் பகுதியில் பருத்தி பயிர் செய்வதில் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர். பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்ட நிலப்பரப்பும் சென்ற வருடத்தை விட அதிகமாக உள்ளது. பூச்சி தாக்குதலுக்குள்ளான பருத்தி பயிரை வேளாண் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அடுத்த மாதம் அறுவடைக்குப் பிறகு பருத்தி பஞ்சை நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் இந்த வருடம் கொள்முதல் செய்யும்போது சென்ற வருடத்தைவிட அதிக விலைக்கு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Kutu , Kollidam: Mayiladuthurai District Achalpuram near Kollidam and Kollidam, Alalasundaram, Manikkavasal,
× RELATED துவரங்குறிச்சி அருகே மலை குன்றில் பயங்கர காட்டுத்தீ