மாட்டு தீவன வழக்கில் சிறை தண்டனை பெற்ற பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஜாமினில் விடுதலை.!

ராஞ்சி: மாட்டு தீவன வழக்கில் சிறை தண்டனை பெற்ற பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள ஹோட்வார் சிறையில் அடைக்கப்பட்டார். டொராண்டா கருவூலத்தில் இருந்து 139.35 கோடி ரூபாய் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட வழக்கில், தற்போது தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், அவரது தரப்பில் ஜாமீன் கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அவருக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதால் லாலுவின் வழக்கறிஞர் தரப்பில், தலா ஒரு லட்சத்து இரண்டு ஜாமீன் பத்திரங்களையும், உயர்நீதிமன்றம் நிர்ணயித்த ஜாமீன் தொகையான 10 லட்சமும் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டது. இந்த செயல்முறைகள் முடிந்ததால் ராஞ்சியில் உள்ள ஹோட்வார் சிறை நிர்வாகம் லாலுவை ஜாமீனில் விடுதலை செய்தது.

இதற்கான உத்தரவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி உள்ளது. அதனால் இன்று லாலு தனது பீகார் வீட்டுக்கு செல்லலாம் என்று கூறப்படுகிறது. லாலு ஜாமீனில் விடுதலையாவதால், பீகாரில் ஆளும் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் விருந்தில் லாலு குடும்பத்தினரும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: