×

மானாமதுரை அருகே கிடைத்துள்ள பண்டையகால தமிழர்கள் பற்றிய கல்வெட்டுகளை ஆணவனப்படுத்த வேண்டும்: தொல்லியல்துறைக்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

மானாமதுரை: மானாமதுரை அருகே கிடைத்துள்ள பண்டையகால தமிழர்கள் பற்றிய கல்வெட்டுகளை ஆணவனப்படுத்த வேண்டும் என தொல்லியல்துறைக்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் தொல்லியல்துறை சார்பில் கீழடி, கொந்தகை, அகரம் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் கல்வெட்டுகள், முதுமக்கள் தாழிகள் அதிக அளவில் கிடைத்து வருகின்றன. மானாமதுரை அருகே ஆலங்குளம், காலத்தியேந்தல், மாங்கோன் உள்ளிட்ட பகுதிகளில் ஆராய்ச்சியாளர்கள் பல கல்வெட்டுகளை கண்டறிந்துள்ளனர்.

இதில் மானாமதுரை நல்லாண்டவர் கோயில் வாசலில் தண்ணீர் தானம் குறித்த கல்வெட்டும், வைகை ஆற்றங்கரையில் பசுமாடு வழங்கிய பல கல்வெட்டுகள் பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. எனவே கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளை முறையாக பாதுகாக்கவேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே பல கல்வெட்டுகள் அழிந்து வரவும் நிலையில் அரிதாக கிடைக்கும் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தி வைக்கவேண்டும். மேலும் இவற்றை இளையதலைமுறையினர் அறிந்துகொள்ளும் வண்ணம் காட்சிப்படுத்த வேண்டும் எனவும் தொல்லியல் துறைக்கு வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Tamilans ,Manamadur , Manamadurai, Ancient Inscription, Department of Archeology, Social Activists
× RELATED மானாமதுரையில் தெரசாள் ஆலய தேர் பவனி...