இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கோரி பேரவையில் தனி தீர்மானம்..!!

சென்னை: இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவிட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக்கோரி சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரும் அரசினர் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆற்றிய பணிகளை அனைவரும் நன்கு அறிவீர்கள். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Related Stories: