×

ஸ்ரீ ரங்கத்தில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்... ரங்கா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 108 வைணவ தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி, சித்திரை தேர் திருவிழா, கடந்த 2021ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள் தோறும் காலை, மாலை வேலைகளிலில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நம் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட திருவிழா இன்று நடைபெற்றது.

அதிகாலை 4.45 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து சித்திரை தேரில் புறப்பட்ட உற்சவர் நம் பெருமாள் ஆஸ்தான மண்டபம் வந்து அடைந்தார். தொடர்ந்து 6.15 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளிய நம் பெருமாள் கீழசித்திரை வீதியில் இருந்து பக்தர்கள் வடம் பிடிக்க 4 சித்திரை வீதிகளில் வலம் வந்தார். அப்போது ரங்கா ரங்கா என ஆயிரக்கணக்கான பக்தர்கள் முழக்கமிட்டது விண்ணைத் தொட்டது.  க்தர்களுக்கு குடிநீர் வசதியும் பாதுகாப்பு வசதியும் செய்யப்பட்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை 6 மணி முதல் ஸ்ரீரங்கத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. தேரோட்டம் முடிந்த பிறகு மின்விநியோகம் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாளைய 30ம் தேதியன்று சப்தாவரணமும், மே 1ம் தேதியன்று ஆளும் பல்லக்குடன் சித்திரை திருவிழா நிறைவடையும்.



Tags : Siritra Festival ,Sri Rangam Chroutham , Sri Rangam, Chithirai, Festival, Therottam
× RELATED உலகப்புகழ் பெற்ற மதுரை...