×

டெல்லி ஷாகீன் பாக்கில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 50 கிலோ ஹெராயின் பறிமுதல்: போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிரடி

டெல்லி: டெல்லி ஷாகீன் பாக்கில் வீட்டில் சாக்கு பைகளில் கட்டி வைத்திருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், ஒருவரை கைது செய்தனர். அதே பகுதியில் ஒரு மரத்தின் கீழ் இருந்த 30 லட்ச ரூபாய் பணம், பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் 47 கிலோ மதிப்பிலான போதைப் பொருள் போன்றவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ரூ.100 கோடி மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் மற்றும் பிற போதைப் பொருள்கள் மற்றும் ரூ.30 லட்சம் ரொக்கம் ஆகியவை தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக NCB இன் டைரக்டர் ஜெனரல் பிரதான் கூறுகையில்; நார்கோ-டெரரிசத்துக்கு எல்லா சாத்தியங்களும் உள்ளன.

இந்த நெட்வொர்க் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.எனவே போதை-பயங்கரவாதத் தொகுதி இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன. இருப்பினும், இது விசாரணைக்கு உட்பட்டது. இது பல நாட்களாக நடந்து வருகிறது. இந்த வழக்கில் மேலும் பலர் சிக்கியுள்ளனர். முழு நெட்வொர்க்கையும் பிடிக்க முயற்சி செய்து வருகிறோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த நடவடிக்கையில் பாகிஸ்தானியர்கள் பிடிபட்டனர். மேலும், முசாபர்நகர் மற்றும் கைரானாவில் இருந்து மக்கள் பிடிபட்டனர்.

அப்போது நடைபெற்ற விசாரணையில்தான் ஷாஹீன் பாக் அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. ஹெராயின் இறக்குமதி செய்யப்படுவது மட்டுமல்லாமல் அடுக்குமாடி குடியிருப்பில் அபின் மூலம் ஹெராயின் தயாரிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் விற்கப்படும் ஹெராயின் மூலம் பெறப்படும் பணம் ஹவாலா மூலம் துபாய்க்கு அனுப்பப்படுவதாக தகவல் கிடைத்துள்ளன” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து ஹவாலா பணம் வேறு ஏதேனும் சட்டவிரோத நோக்கங்களுக்காக இருந்ததா என NCB அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Delhi Shakeen Bagh , Seizure of 50 kg of heroin worth Rs 100 crore in Delhi Shakeen Bagh: Narcotics Division Action
× RELATED காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4ல்...