×

சீனாவை அடுத்து அமெரிக்காவிலும் பரவும் பறவைக் காய்ச்சல் : கொலராடோ மாகாணத்தில் ஒருவருக்கு H5N1 கிருமி பரவி இருப்பது கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: சீனாவில் நேற்று முன்தினம் புதுவிதமான பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில், அமெரிக்காவில் நேற்று கோழிப்பண்ணையாளர் ஒருவருக்கு avian influenza எனப்படும் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2002ம் ஆண்டு H3N8 பறவை காய்ச்சல் தொற்று வட அமெரிக்காவில் வாழும் நீர் பறவைகளில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.இந்த கிருமி பறவைகள், குதிரைகள், நாய்கள் மற்றும் சீல்களை பாதிப்பதாக அறியப்பட்ட போதும் மனிதர்களுக்கு பரவியதாக தகவல் இல்லை. இந்த நிலையில் சீனாவின் ஹினான் மாகாணத்தில் 4 வயது சிறுவனுக்கு சமீபத்தில் H3N8 பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே அமெரிக்காவின் மேற்கு மாநிலமான கொலராடோவில் வசிக்கும் கோழி பண்ணையாளர் ஒருவருக்கு புதிய வகை பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பறவைகள் மற்றும் விலங்குகளை பாதிக்கும் H5N1 என்ற வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கொலராடோ மாகாண நிர்வாகம் கூறியுள்ளது. உடனடியாக அவரை தனிமைப்படுத்தியுள்ள சுகாதாரத்துறையினர், அவருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதனை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். தொற்று அறியப்பட்ட மேட்ரோஸ் கவுண்ட்டி பகுதியில் உள்ள கோழி பண்ணைகளில் அமெரிக்க தொற்று நோய் தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


Tags : United States ,China ,Colorado , China, USA, bird flu
× RELATED அமெரிக்காவில் நடைபெற்ற மெட் காலா பேஷன் ஷோ 2024..!!