×

டெல்லி அணி வெற்றி

மும்பை: டெல்லி-கொல்கத்தா அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் பிஞ்ச் 3 ரன்னில் சக்காரியா பந்தில் போல்ட் ஆனார். அவருக்கு பின் வந்தவர்களில் கேப்டன் ஸ்ரேயஸ் 42 ரன் (37 பந்து, 4 பவுண்டரி) அடித்து குல்தீப் பந்தில் விக்கெட் கீப்பர் பந்திடம் கேட்ச் ஆனார். நிதிஷ் ராணா 57 ரன்(34 பந்து, 4 சிக்சர், 3 பவுண்டரி) அடித்து ரகுமான் பந்தில் கேட்ச் ஆனார். 3 பேர் ஒற்றை இலக்கிலும், 3 பேர் ‘டக்’ அவுட் ஆனார்கள். இதில், சிறப்பாக பந்து வீசிய 3 ஓவர்கள் வீசி 4 விக்கெட் எடுத்தார். இறுதியில்  டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 20 ஓவரில் 146 ரன் மட்டுமே எடுத்தது. இதை தொடர்ந்து 147 ரன் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி  லகாத்திருந்தது.

பிரித்விஷா சந்தித்த முதல் பந்திலேயே யாதவ் பந்தில், அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். டெல்லி அணியில் வார்னர் மட்டுமே ஓரளவுக்கு தாக்குபிடித்து ஆடி 42 ரன் (26 பந்து,8 பவுண்டரி) எடுத்து உமேஷ் பந்தில் அவுட் ஆனார். அதற்கு பிறகு வந்தவர்கள் சோபிக்கவில்லை. இந்நிலையில் ரசல், வெங்கேடஷ் அய்யர் ஆகியோர் தலா தலா ஒரு ஓவரில் 14 ரன் வாரி வழங்கினர். பந்தை அடித்து நொறுக்கிய அக்‌ஷர் படேல்24 ரன்(17 பந்து, 1 சிக்சர், 2 பவுண்டரி) எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் ஆட்டத்தை தன் கையில் எடுத்த பாவல் 33 ரன்(16 பந்து, 3சிக்சர், 1 பவுண்டரி ) எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். தோல்வி உறுதியானதால் கேகேஆர் கேப்டன் ஸ்ரேயஸ் கடைசி ஓவரை போட்டார். அதில் சிக்சர் அடித்து பவுல் அணியை வெற்றி பெற வைத்தார். இதனால், டெல்லி அணி 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

Tags : Delhi , Delhi team wins
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு