ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கையை உயர்த்த பூசாரிகள் சங்கம் கோரிக்கை

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு, கோயில் பூசாரிகள் நலச்சங்க தலைவர் வாசு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கிராமப்புற கோயில் பூசாரிகள் ஓய்வூதியம் பெறுவோர் எண்ணிக்கை 4000 என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.‌ வாரியத்தில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்க வயது வரம்பை 18 ஆக குறைக்க வேண்டும். கிராமப்புற கோயில் பூசாரிகள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களின் கோரிக்கைகளை மானியக் கோரிக்கையின் போது அறிவிப்பாக இடம் பெறச் செய்யுமாறு  கிராமப்புற கோயில் பூசாரிகளின் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

Related Stories: