உதவி வனப்பாதுகாவலர் தேர்வு பொறியியல் பட்டதாரிகளை அனுமதிக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: உதவி வனப் பாதுகாவலர் தேர்வுக்கு அனைத்து பொறியியல் பாடப்பிரிவு பட்டதாரிகளையும் அனுமதிக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: வன நிர்வாகத்திகு எந்த தொடர்பும் இல்லாத இளம் அறிவியல் கணிதம், புள்ளியியல் படித்தவர்களும், கணினி அறிவியல், மின்னியல், மின்னணுவியல், சிவில் ஆகிய பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், வனத்துடன் தொடர்புடைய மற்ற பொறியியல் பட்டங்கள் இப்பணிக்கு தகுதியற்றவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் தமிழக அரசுப் பணி தொகுப்பு 1ஏ-வில் வரும் உதவி வனப் பாதுகாவலர் பணிக்கான போட்டித் தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் போது எந்தவொரு பொறியியல் பட்டம் பெற்றவரும் அதில் பங்கேற்கலாம் என்று அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக தேர்வாணையத்திற்கு அரசும், வனத்துறையும் உரிய பரிந்துரைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: