×

போதைப்பொருள் வழக்கில் சிக்கி தமிழகத்திற்கு தப்பி வந்த இலங்கை தமிழர்கள் கைது

ராமநாதபுரம்: போதைப்பொருள் வழக்கில் சிக்கிய 2 தமிழர்கள் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்பி வந்தபோது, போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே புதுக்குடி கடற்கரை பகுதியில் இலங்கை தமிழர்கள் 2 பேர் நேற்று அதிகாலை வந்தனர். தொண்டி மரைன் போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இலங்கை, யாழ்ப்பாணம் குரு நகர் அருள்ராஜ் (34), ஜெயசீலன் (27) என்பது தெரிந்தது. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் அங்கு வாழ வழியின்றி எவ்வித உடமைகளுன்றி கடல் வழியாக தமிழகம் வந்ததாக கூறினர். ஆனால் அவர்கள் அணிந்திருந்த பனியன்களில் கிரீஸ் ஒட்டியிருந்ததால் போலீசார் சந்தேகமடைந்தனர். மீன்பிடி தொழில் செய்து வரும் இருவரும், அங்குள்ள படகை திருடி அதன் மூலம் தொண்டி அருகே புதுக்குடி கடற்கரை வந்தது தெரிந்தது. தொடர் விசாரணையில், இலங்கையில் போதைப்பொருள் வழக்கில் இருவரும் தொடர்புடையவர்கள் என தெரிந்தது.  மண்டபம் மரைன் போலீஸ் நிலையத்திற்கு இருவரையும் கொண்டு வந்தனர். தீவிர விசாரணைக்கு பின், இலங்கையில் போதைப்பொருள் வழக்கு நிலுவையில் உள்ளதால், அகதிகளாக ஏற்காமல், எவ்வித ஆவணமின்றி தமிழகத்திற்குள் ஊடுருவியதாக வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Tags : Tamil Nadu , Sri Lankan Tamils arrested for fleeing to Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...