வெற்றி விழா, சின்ன கவுண்டர் பட வில்லன் நடிகர் சலீம் கவுஸ் காலமானார்

சென்னை: வெற்றி விழா, சின்ன கவுண்டர் உள்பட பல படங்களில் வில்லனாக நடித்த சலீம் கவுஸ் காலமானார். மும்பையை சேர்ந்தவர் சலீம் கவுஸ் (70). இந்தியில் 1978ல் ஸ்வர்க் நர்க் படத்தில் அறிமுகமானார். இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்தார். தமிழில் கமல்ஹாசன் நடித்த வெற்றி விழா படத்தில் வில்லனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து சின்ன கவுண்டர், மகுடம், செந்தமிழ் பாட்டு, தர்மசீலன், திருடா திருடா, சீமான், ரெட், தாஸ், சாணக்யா, வேட்டைக்காரன் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். கடைசியாக ஆண்ட்ரியா நடித்து வரும் கா படத்திலும் இவர் நடித்து வந்தார். தனது கணீர் குரலால் வில்லன் வேடங்களில் அசத்தியவர் சலீம் கவுஸ். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு நேற்று முன்தினம் இரவு மாரடைப்பு ஏற்பட்டது. மும்பையிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று பிற்பகல் காலமானார்.

Related Stories: