×

திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் பெட்ரோல், டீசல் வாட் வரியை குறைத்தது தான் வரலாறு: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

சென்னை: பேரவையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்பான விவாதத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: எப்போதெல்லாம் திமுக ஆட்சியில் இருந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் பெட்ரோல்-டீசலுக்கு வாட் வரியை குறைத்தது தான் வரலாறு. என்றைக்குமே உயர்த்திய வரலாறு இல்லை. கலைஞரின் ஆட்சிக் காலத்தில் மூன்று முறை; இந்த ஆட்சியில் ஒருமுறை குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கலைஞரின் ஆட்சி 2011-ல் முடியும்போது பெட்ரோலில் வரி, 14 ரூபாய் 47 பைசா. நாங்கள் 2021-ல் ஆட்சிக்கு வரும்போது 26 ரூபாய் 20 பைசா. முதல்வர் சொல்லி 3 ரூபாய் குறைத்த பிறகு, அவர்கள் 5 ரூபாய் குறைக்கும்போது, அதில் நாம் 13 சதவிதம் கூடுதலாக எடுப்பதன் காரணமாக இன்னும் 65 பைசா குறைத்த பிறகு, இன்றைக்கு நம்முடைய மாநிலத்தினுடைய வருமானம் 22 ரூபாய் 54 பைசா. அப்படியென்றால் சுமார் 50 சதவிதம்தான் நம்முடைய வரி இந்த 7 வருடத்தில் அதிகரித்திருக்கிறது.

அவர்களுடையது 300 சதவிதம் அதிகரித்து இருக்கிறது. எது நியாயம். இதேபோல் டீசலில் கலைஞர் ஆட்சி முடியும்போது, 7 ரூபாய் 60 பைசா, நாங்கள் ஆட்சிக்கு வரும்போது 19 ரூபாய் 75 பைசா. அவர்கள் 10 ரூபாய் குறைத்ததனால் ரூ.1.30 போனதால், இன்றைக்கு 18 ரூபாய் 45 பைசா. அப்போது டபுளுக்கு மேல் கொஞ்சம் ஆகியிருக்கிறது. அவர்களுடையது 6 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த அளவிற்கு அதிகரித்துவிட்டு, கொஞ்சம் குறைத்து, நாங்களெல்லாம் இதை செய்யவில்லை என்று கேட்டால், நான் இரண்டே இரண்டு கேள்வியை கேட்டு, நான் அமர்கிறேன். முதல் கேள்வி. எப்போதெல்லாம் அவர்கள் அதிகரித்திருந்தார்களே, நாம் 6 மடங்கு அதிகரித்து இருந்தால். அவர்கள் ஒரு மடங்கு குறைக்கும்போது, நாமும் ஒரு மடங்கு குறைக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : DMK ,Finance Minister ,Palanivel Thiagarajan , When the DMK came to power, it was history that reduced the VAT on petrol and diesel: Finance Minister Palanivel Thiagarajan
× RELATED கடந்த அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக...