அரசு ஊழியர்கள் ஓய்வு வயது விவகாரம் மாதத்தின் கடைசி நாள் கணக்கில் எடுக்கப்படும்: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சார்ந்த பணிகளில் பணியாற்றும் ஊழியர்கள் 58 வயதில் ஓய்வு பெறவேண்டும் என்ற விதி இருந்து  வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு அரசாணை 92ன்படி ஓய்வு பெறும் வயது 60 என்று அரசு அறிவித்தது. இந்நிலையில், ஒரு பணியாளர் ஓய்வு பெறும் வயதை எதன் அடிப்படையில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற குழப்பம் இருந்து வந்தது. இது குறித்து அரசுக்கு விளக்கம் கேட்டு துறை வாரியாக கடிதங்கள் வந்தன. அதன் பேரில் உரிய விளக்கம் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு செயலாளர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அரசாணை: அரசு ஊழியர்கள் வயதான காரணத்தால் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயது 59 வயது என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 2021ம் ஆ ண்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை 92ல் ஓய்வு பெறும் வயது 60 ஆண்டுகள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வயதை  எந்த அடிப்படையில் கணக்கில் எடுப்பது என்பதில் பல்வேறு துறைகள் மற்றும் தனி நபர்களிடம்  இருந்து விளக்கம் கேட்கப்பட்டது. ஒரு நபர் ஓய்வு பெறும் நாள் என்பது அவர் 60 வயதை எட்டும் தேதியை, மட்டும்  எடுக்காமல் அந்த மாதத்தின் இறுதி நாள் வரை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Related Stories: