×

இதுவரை காணாததை காண போகிறது இந்தியா 125 டிகிரி வெயில்: பல்வேறு மாநிலங்களை வாட்டும்; பாதுகாப்பாக இருக்க அறிவுரை

புதுடெல்லி: வெப்ப நாடான இந்தியாவை பொருத்தவரை வழக்கமாக மே, ஜூன் மாதங்களில் உச்சத்தை எட்டும் வெயில், இந்தாண்டு மார்ச் மாதமே கொளுத்த தொடங்கி விட்டது. கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவு வடமேற்கு இந்தியாவில் அதிக வெயில் பதிவாகி உள்ளது. டெல்லி, உத்தர பிரதேசம், அரியானா, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான வெப்பம் வாட்டி வதைக்கும் என்றும் அங்கு அடுத்த 3 முதல் 4 வாரங்களில் அதிகப்பட்சமாக 125.6 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதன் அறிக்கையின்படி, அடுத்த 5 நாட்கள் நாடு முழுவதும் தாங்க முடியாத வெப்பத்தின் தாக்கம் இருக்கக் கூடும். இது குறிப்பாக மத்திய, வடமேற்கு மாநிலங்களை அதிகம் பாதிக்கும். அதேபோல், அடுத்த 3 நாட்களுக்கு நாட்டின் கிழக்கு பகுதியிலும் இந்த பாதிப்பு உணரப்படும். பின்னர் இது சற்று தணியத் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 3 நாட்களுக்கு வடமேற்கு இந்திய மாநிலங்களில் வெப்பம், தற்போது இருப்பதை விட 2 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி, உபி., உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த வெப்பம் 113 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் என தெரிய வந்துள்ளது.

இதனால், இம்மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மலைப் பிரதேசங்களான ஜம்மு உள்ளிட்ட பகுதிகளில் கூட வெயில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி மக்களை வாட்டி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தினால் ஒடிசா, மேற்கு வங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நாளை முதல் மே 2ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர நாட்டின் பல பகுதிகளில் வெப்பம் ஏற்கனவே 113 டிகிரி பாரன்ஹீட் ஆக பதிவாகி வருகிறது. சமவெளிப் பகுதிகளில் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் மலைப் பிரதேசங்களில் 86 டிகிரி பாரன்ஹீட் ஆகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடுமையான வெயில் தாக்கத்தின் விளைவாக, தொடர் மின்வெட்டு, அதனால் ஏற்படும் உற்பத்தி பாதிப்பு என நாடு முழுவதும் இதன் தாக்கம் உணரப்படும். மே மாதத்தில் சிறிதளவு பெய்யும் கோடை மழையை தவிர இதற்கு வேறு நிவாரணம் இல்லை என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

* ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மகாராஷ்டிராவில் உள்ள விதர்பாவுக்கு அடுத்த 4 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* ஜார்க்கண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், உபி., பீகார், ஒடிசா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நேற்று முன்தினம் 118.8 டிகிரி பாரன்ஹீட் முதல் 122 டிகிரி பாரன்ஹீட் வரை  வெயில் பதிவாகி உள்ளது.
* மகாராஷ்டிராவின் விதர்பா, மேற்கு ராஜஸ்தானில் கடந்த 2 மாதங்களாக அதிக பட்சமாக 104 முதல் 113 டிகிரி பாரன்ஹீட் பதிவாகி உள்ளது.
* வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் வீட்டில் உள்ள முதியவர்கள், நோயினால் பாதித்தவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பாகிஸ்தானில் மோசம்
* பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஜகோபாபாத் தான் பூமியின் மிகவும் வெப்பமான இடமாகும். இங்கு கோடையில் 125.6 முதல் 127.4 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை இருக்கும். இதனால் ஜகோபாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோடைக்காலத்தில் காலை கீழே வைக்கவே முடியாது என்று கூறப்படுகிறது.  
* இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது, உலகளவில் இந்தியாவில் தான் முதல் முறையாக 125.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தாக்க கூடுமோ என்று அஞ்சப்படுகிறது.
* புவி வெப்பமடைதலினால், 2100ம் ஆண்டில், உலக மக்கள் தொகையில் 74% பேர் ஆண்டுக்கு 20 நாட்கள் கடுமையான வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
* உலகிலேயே மிகவும் வெப்பமான மற்றும் வறண்ட இடம் ‘டானகில் டிப்ரஷன்’. இது உலகிலேயே பூமியில் மிகவும் தாழ்வான இடம். இது எத்தியோப்பியாவின் அபார் பகுதியில் இருக்கிறது.

Tags : India , India is going to see unprecedented 125 degree sun: scorching various states; Advice to be safe
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...